Friday 19 March 2010

சிறந்த நகரங்கள்

நடப்பு 2010ம் ஆண்டிற்கான, வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலை இந்திய தொழிலக கூட்டமைப்பும், இந்திய போட்டியியல் துறை பயிலகமும் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 37 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் முறையே 4, 5, 6, 7-வது இடங்களில் உள்ளன. ஜம்மு நகரம் 20வது இடத்தில் உள்ளது. பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கைத்தரம், சமூக கலாச்சார சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி, இயற்கை காட்சிகள், பொதுச்சேவை மற்றும் பொழுதுபோக்கு, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிதாபாத், லூதியானா, லக்னோ, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

தனிப்பட்ட அம்சங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் மும்பை 12வது இடத்திலும், புதுதில்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் முறையே 17, 18வது இடங்களிலும் உள்ளன. அறிவுசார் தொழில்நுட்ப கல்வியில் புதுதில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, பூனா போன்ற நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.

No comments:

Post a Comment