Friday 12 March 2010

படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும்

இந்தியாவில் மொத்தம் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள் இருக்கின்றனர். ஆனால், தேவை 17 ஆயிரத்து 641. 10 லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்தில்தான் நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட், 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நிர்ணயம் 2030ல் தான் நடக்கும். ஆனால், அப்போது மக்கள் தொகை உயர்ந்துவிடும். தற்போது, ஒரு நீதிபதிக்கு, இரண்டாயிரத்து 127 வழக்குகள் என்ற விகிதத்தில், மொத்தம் நாடு முழுவதும், மூன்று கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடிப்பதற்கு 320 ஆண்டுகள் தேவைப்படும்.

படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க, வழக்குகளும் அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. கல்வியில் முன்னணியில் உள்ள கேரளாவில் ஒரு ஆண்டுக்கு 1000 பேருக்கு 28 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகாரில் 1000 பேருக்கு மூன்று வழக்குகள்தான் பதிவாகின்றன.

No comments:

Post a Comment