Thursday 11 March 2010

என்கவுன்டர்சாவு மனித உரிமை

1994 முதல் 2008}ம் ஆண்டு வரை இந்தியாவில் 16,836 காவல் சாவுகள் நடைபெற்றுள்ளன.÷தமிழகத்தில் 2006 முதல் 2010}ம் ஆண்டு வரை 22 என்கவுன்டர் சம்பவங்களில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட பின்னர் 1993}ம் ஆண்டில் 1,502 என்கவுன்டர்கள் பற்றிய தகவல்கள் காவல்துறையிடமிருந்து ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் 12 சம்பவங்களில் போலியாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கு ஆணையம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


அதேநேரத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணையத்துக்கு 1,262 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 11 புகார்களில் உண்மை உள்ளதாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள தகவல்படி 1993 முதல் 2009 வரை 23 போலி என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுன்டர் சமயத்தில் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் மோதல் நடைபெறும்போது இதுவரை போலீஸôர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்களே இல்லை.

ஒருசில என்கவுன்டர்களுக்குப் பின்னால் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் சிலருக்கு, பதவி உள்பட சகல வசதிகளுடனும் சுகபோக வாழ்க்கை கிடைக்கிறது என்பது மறைமுகமான செய்தியாகும். இதற்கு காவல்துறையினர் உடன்பட்டு உதவுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூழ்நிலையிலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதை 135 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதைவிட கொடூரமான இந்த "என்கவுன்டர்' முறைஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளின் வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது விவாதத்துக்கு உள்படுத்த வேண்டிய பொருள்

No comments:

Post a Comment