பெண்களுக்கு கல்வி, உடல்நலம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்கு இவற்றுக்கெல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான பங்கெடுப்பு, குறிப்பாக விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு 0.07 சதவீதமும், திறன் மேம்பாடு மற்றும் மகளிருக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்றவற்றுக்கு 0.49 சதவீதமும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
2007-08ல், 410 ரூபாயாகவும், 2009-10ல் 1,000 ரூபாயாகவும், இப்போது அதில் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 1,190 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, உடல்நலம் போன்றவைக்கு எவ்வளவு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து, "பட்ஜெட் மையம் மற்றும் அரசின் கடமை' (சி.பி. ஜி.ஏ.,) என்ற அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது.அதில், சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு வெறும் 1,190 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
Friday, 12 March 2010
படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும்
இந்தியாவில் மொத்தம் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள் இருக்கின்றனர். ஆனால், தேவை 17 ஆயிரத்து 641. 10 லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்தில்தான் நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட், 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நிர்ணயம் 2030ல் தான் நடக்கும். ஆனால், அப்போது மக்கள் தொகை உயர்ந்துவிடும். தற்போது, ஒரு நீதிபதிக்கு, இரண்டாயிரத்து 127 வழக்குகள் என்ற விகிதத்தில், மொத்தம் நாடு முழுவதும், மூன்று கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடிப்பதற்கு 320 ஆண்டுகள் தேவைப்படும்.
படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க, வழக்குகளும் அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. கல்வியில் முன்னணியில் உள்ள கேரளாவில் ஒரு ஆண்டுக்கு 1000 பேருக்கு 28 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகாரில் 1000 பேருக்கு மூன்று வழக்குகள்தான் பதிவாகின்றன.

Thursday, 11 March 2010
என்கவுன்டர்சாவு மனித உரிமை
1994 முதல் 2008}ம் ஆண்டு வரை இந்தியாவில் 16,836 காவல் சாவுகள் நடைபெற்றுள்ளன.÷தமிழகத்தில் 2006 முதல் 2010}ம் ஆண்டு வரை 22 என்கவுன்டர் சம்பவங்களில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட பின்னர் 1993}ம் ஆண்டில் 1,502 என்கவுன்டர்கள் பற்றிய தகவல்கள் காவல்துறையிடமிருந்து ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் 12 சம்பவங்களில் போலியாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கு ஆணையம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணையத்துக்கு 1,262 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 11 புகார்களில் உண்மை உள்ளதாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள தகவல்படி 1993 முதல் 2009 வரை 23 போலி என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கவுன்டர் சமயத்தில் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் மோதல் நடைபெறும்போது இதுவரை போலீஸôர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்களே இல்லை.
ஒருசில என்கவுன்டர்களுக்குப் பின்னால் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் சிலருக்கு, பதவி உள்பட சகல வசதிகளுடனும் சுகபோக வாழ்க்கை கிடைக்கிறது என்பது மறைமுகமான செய்தியாகும். இதற்கு காவல்துறையினர் உடன்பட்டு உதவுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூழ்நிலையிலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதை 135 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதைவிட கொடூரமான இந்த "என்கவுன்டர்' முறைஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளின் வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது விவாதத்துக்கு உள்படுத்த வேண்டிய பொருள்

முல்லைப் பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு நதியின் மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டபொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேய நிர்வாகி இந்த அணையைக் கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.
ஊடகங்கள நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்துச் செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால், அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பலரும் ஆன்மிகச் சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி, அவரது எழுத்துகளை ஆராதித்து வரும் வேளையில், அவரது மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டுவிட்டது. அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல என்பதுடன், மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வாரப் பத்திரிகையை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிகை இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் மீறப்பட்டு உறவின் ஒழுக்கக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்தத் தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும், தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓராண்டுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர்கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம்பட்டு ஒரு மரக்கிளையைப் பிடித்து எழ முடியாமல் திணறியபோது மனிதாபிமான முறையில் அவரைக் காப்பதைவிட படம்பிடிப்பதில் முனைப்பாக இருந்ததை மறந்திருக்க முடியாது.
தொலைக்காட்சியில்வெவ்வேறு பெயரில் ஒளிபரப்பும் நிகழ்வில்கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசூக்காக சொன்ன அந்தக்காலப் பாடல்கள் இல்லாமல், பாடும் குழந்தையின் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை, பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழ்ந்து, தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.
பத்திரிகைச் சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்குப் பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும், மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்க்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.

பெண்கள் Masotha
பெண்களுக்கு என்று எந்த ஓர் சலுகையும் ''கொடுமதி நிறைந்த'' ஆண் (?) கயவானிகள் விட்டுத்தர சம்மதிக்கவே மாட்டார்கள் என்று.. இதில் சிலர் நல்ல வேஷம் கட்டி நடிக்கவும் செய்கின்றனர்.. ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் அரசியல் ''நிர்பந்தம் காரணமாய்'' ஆதரிக்கவேண்டிய சூழ்நிலையால்..உதாரணம் நம்ம மஞ்ச துண்டார்.. அடுத்து ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடாம்.. சிறுபான்மையினருக்காக என்கிற முகமூடியை அணிந்துகொண்டு எதிர்ப்பார்..உதாரணம் நம்ம ''முலாயம்'' அடுத்து ''பிற்படுத்த பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்கிற முகமூடியணிந்து..உதாரணம் நம்ம ''லொள்ளு'' லாலு.. என்னமோ இவர்கள் தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்று ''பீத்திக்க'' துடிக்கின்றனர்.. இவர்களின் இந்த துடிப்பு (!) இந்த அறுபது ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தை சிறுபான்மையிருக்கும் தாழ்த்தப்பட்டோற்கும் கொண்டு வந்தது ??பொய் வேஷம் கட்டி புளுகு அறிக்கை விட்டு இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் பெண்களுக்கு எதிராய் இருந்துவிடப்போகிரீர்கள் வெட்கம்கெட்ட மனிதர்களே?
Wednesday, 10 March 2010
பி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள் போர்க்கொடி
மான்சான்டோ, மகிகோ நிறுவனங்கள் விற்ற மரபணு பருத்தி விதைகளால் விளைச்சல் இல்லாமல் போனதால் கடனாளியாகி விட்டோம் என்று ஆந்திர விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ விதை நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மரபணு பயிர் விதைகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த மரபணு பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் அமோகமாக இருக்கும். பூச்சிகள் தாக்காது என்று அந்நிறுவனம் கூறியது.
இதையடுத்து மத்திய அரசு முதன் முதலாக மரபணு (பி.டி.) பருத்தி பயிரிட அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் இந்த மரபணு பருத்தி விதைகளை மான் சாண்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.
ஆனால் அந்த மரபணு பருத்தியை பூச்சிகள் தாக்கியதால் விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இது குறித்து ஆந்திர விவசாயிகள் சங்கம் தெரிவிக்கையில்:
"மான் சான்டோ, மகிகோ போன்ற மரபணு விதை நிறுவனங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எங்களை ஏமாற்றி மரபணு பருத்தி விதைகளை அதிக விலைக்கு விற்றன. ஆனால் விளைச்சல் இல்லாததால் நாங்கள் கடனாளியாக மாறி விட்டோம். மரபணு பருத்தி பயிரிட்ட நிலத்தில் வேறு பயிர்களை பயிரிட்டோம். அதுவும் விளையவில்லை.
இதுபற்றி நாங்கள் வேளாண்மை விஞ்ஞானி களிடம் கேட்டபோது, மரபணு பயிர்களை விளை வித்த நிலத்தில் வேறு இயற்கையான பயிர்கள் விளைவிக்க முடியாது. அப்படியே அதில் பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. மரபணு பயிர்களை பயிரிடும் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்கள் அழிந்து விடும். இதனால் அந்த நிலம் தரிசு நிலமாக மாறி விடும் என்று எங்களிடம் கூறினார்கள்.
இதுபற்றி நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தற்போது மரபணு அரிசி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக அறிந்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் நாங்கள் ஆந்திராவில் மரபணு பயிர்களை பயிரிட அனுமதிக்க மாட்டோம்.
இந்திய இயற்கை விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மான்சான்டோ போன்ற சர்வதேச விதை நிறுவனங்களின் சதி செயலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.
மரபணு செடிகளை ஆடு மாடு மேய்ந்தால் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது."
என்று அவர் கூறினார். நன்றி:தமிழ் வெப்துனியா 10.3.2010 ஆன்மீகக்கடலின் கருத்து:
உலகின் மிக மோசமான பிராடு நிறுவனம் மான்சாண்டோ என்ற பெயரை கி.பி.1980களில் அமெரிக்காவிலேயே வாங்கிவிட்டது.அந்த நிறுவனத்தின் அக்குளில் நமது மத்திய அரசு அதிகாரிகளும்,மத்திய அமைச்சர்களும் இருக்கிறார்களோ? கடந்த சில ஆண்டுகளில் 1,00,000 விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான இந்த நிறுவனத்தை ஏன் இந்திய அரசு விட்டுவைத்திருக்கிறது? இரண்டாவது (பொருளாதார) சுதந்திரப்போர் உண்டானப்பிறகுதான் மத்திய அரசுக்கு சுயபுத்தி வருமா?

Subscribe to:
Posts (Atom)